×

சொத்து குவிப்பு வழக்கு ஒன்றிய அரசு அதிகாரியிடம் ரூ.20 கோடி பறிமுதல்

புதுடெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வாப்கோஸ் (வாட்டர் அண்ட் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராஜிந்தர் குமார் குப்தா மீது சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது.

இவருக்கு சொந்தமான டெல்லி, குர்கிராம், பன்ச்குலா, சோனிபட் மற்றும் சண்டிகரில் உள்ள 19 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் அங்கிருந்து கணக்கில் வராத கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த ரூ.20 கோடி பணத்தை சிபிஐ.யினர் பறிமுதல் செய்தனர். ராஜிந்தர் மனைவி, மகன் மற்றும் மகள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

The post சொத்து குவிப்பு வழக்கு ஒன்றிய அரசு அதிகாரியிடம் ரூ.20 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Union government ,New Delhi ,Wapkos ,Water and Power ,Union Jalsakti Ministry ,Dinakaran ,
× RELATED உடல் உறுப்பு தானத்தை அதிகரிக்க...